தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் விரைவாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என்றும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் முடிந்தவர்கள் விரைவாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.