நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் அச்சம் அதிகரித்துள்ளது.