Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் ஒமைக்ரான்…. மீண்டும் ஊரடங்கா…? அரசு தரப்பு விளக்கம்…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்திலும் கால்பதித்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நைஜீரியாவில் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருக்கலாம் என அறிகுறிகளை வைத்து சந்தேகத்தில் இருக்கின்றனர். அது போக ஆரணி வந்த இன்னொரு வெளிநாட்டு பயணிக்கும் ஓமிக்ரான் அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போக மேலும் 4 பேர் இன்று ஒமைக்ரான் அறிகுறி உள்ள நோயாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் தமிழகத்தில் அவசியம் ஏற்பட்டால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடலாம். இருந்தாலும் மாநிலம் விட்டு மாநிலம் வர இ-பாஸ் தேவை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே கொண்டு வரலாம், தவிர முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |