தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ப்ளூ காச்சல் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உஸ்மான் ரோடு தி.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி அன்று 38 வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 292 அரசு மருத்துவமனைகள் மற்றும் 42 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய 11,333 மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் புதன்கிழமை தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து ஒன்றிய அரசின் அறிவிப்பு படி 18-59 வயதிற்குடையவர்கள் கோவிட தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை இலவசமாக வழங்குவது செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைவதால் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் மேற்கூறிய 11,333 மையங்களில் புதன்கிழமை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளுடன் இணைந்து கோவிட தடுப்பூசி தவணைகளும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதனையடுத்து 12-17 வயதுடைய மாணவர்களின் இரண்டாம் தவணை பெற வேண்டியவர்களுக்கு அந்தந்த பள்ளிகளே பிரதி வார வியாழக்கிழமை அன்று சிறப்பு முகாமை அமைத்து கோவிட் தடுப்பூசி தவணைகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 1,044 பேருக்கு இன்ஃப்ளூன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டதில் தற்போது 364 பேர் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அறிவுரை வழங்கினார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் தற்போது இல்லை. மேலும் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமை முன்னிட்டு இன்று கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.