தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 3,663 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது 2,171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில் அன்று மூன்று மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. அதன்படி அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதிகாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் 2171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 3,663 மனுக்கள் ஏற்கப்பட்டன. சென்னை, வில்லிவாக்கம், துறைமுகம், எடப்பாடி, அரவக்குறிச்சி, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் ஆலங்குளம், நான்குநேரி உள்ளிட்ட 9 தொகுதிகளுக்கான இறுதி பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.