தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பாக சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆளு உருவாக்கப்பட்ட valar.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவில் உயர் திறன் மையங்கள் மற்றும் தொழில் முனைவோர்களை கொண்ட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். அதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. இவர்களின் தொழில் துறையில் திறனை மேம்படுத்தவும் உற்பத்தியை பெருக்கவும், கருத்துக்களை பரிமாறவும், பிரச்சனை மற்றும் சவால்களுக்கு தீர்வு காணவும் இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் “2030- ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்”என்ற இலக்கை அடைவதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த புதிய வலைத்தளத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் சேவை வல்லுனர்களின் விவரங்கள் மற்றும் திட்டங்கள் சம்பந்தமான தகவல்கள் அனைத்தும் இதில் கிடைக்கும். கடந்த ஏப்ரல் மாதம் வரை 242 நிறுவனங்கள் valar 4.0 வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் 29 நகரங்களிலிருந்து 122 பயனர்கள் தங்களின் பெயர், நிறுவனங்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரங்களை பதிவு செய்து இருக்கின்றனர்.