வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அதற்கு மேல் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இதேபோன்று மாற்றுத்திறனாளி இளைஞர்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இப்படி 5 வருடங்கள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் அரசின் உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவி தொகை பெரும் இளைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 மிகாமில் இருக்க வேண்டும். அதன் பிறகு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இந்நிலையில் 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாயும், தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதம்தோறும் 300 ரூபாயும் வழங்கப்படும். இதனையடுத்து மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 400 ரூபாயும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படும்.
இதேபோன்று மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களுக்கு மாதந்தோறும் 600 ரூபாயும், மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு 700 ரூபாயும், பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 1000 ரூபாயும் வழங்கப்படும். இந்த உதவி தொகை பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் உதவித்தொகை பெறுவதற்கு www.tnvelaivaaaipu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.