Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மதுரை மாவட்டத்தில் வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க இருப்பதாக அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா  தொற்று சென்ற வருடம் குறைய தொடங்கியதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை  அறிவித்தனர். இந்நிலையில் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத் துவக்கத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிட இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தற்போது சமீபத்தில் ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் துணை இயக்குனர் ராமநாதன் ஒரு முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது  வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு உதவித்தொகை தரும் திட்டமாகும். மேலும் இதற்கு  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற மாணவர்கள் இதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றால் போதுமானதாகும். அதனை தொடர்ந்து ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இது தவிர உதவி தொகை பெற தேவையான ஆவணங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் கார்டு நகல்  போன்றவற்றை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலை வழிகாட்டு மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |