Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஷவர்மா உணவு கடைகளை மூட உத்தரவு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த வாரம் கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட 3 மாணவிகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஷவர்மா உணவு கடைகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத ஷவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தை கட்டுவதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், சவர்மா உணவு என்பது நமது உணவு இல்லை. சுகாதாரமற்ற முறையில் சில உணவுக் கடைகளில் சவர்மா செய்து தரப்படுகிறது. ஏற்கனவே சமைத்த பொருளை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதில் பாக்டீரியா பரவ அதிக வாய்ப்புள்ளது. சில உணவுக் கடைகளில் பழைய ஷவர்மா மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே தமிழகம் முழுவதும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத சவர்மா உணவு கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |