Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 1 எலுமிச்சையின் விலை 75 ஆயிரம் ரூபாய்…. எங்கென்னு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

ஈரோடு பச்சாபாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் இருக்கிறது. இங்கு பொங்கல் திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து 27ஆம் தேதி கம்பம் நடப்பட்டு அக்னி கும்பம் வைக்கப்பட்டது. அதன்பின் பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம், பால்குடம், தீர்த்தக் குடம், ஆறுமுகக் காவடி, வேல் மற்றும் அக்னி கும்பம் எடுத்து வந்தனர். பின் அம்மனுக்கு பால், தேன், தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இதன் தொடர்ச்சியாக இரவு மாவிளக்கு பூஜை மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது..
 அதனை தொடர்ந்து பிப்..4ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பச்சாம்பாளையத்தில் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு மீண்டும் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட 1 எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. அதை அதே பகுதியை சேர்ந்த கோகுல் ஆனந்தகுமார் என்பவர் ரூபாய் 75 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். இவ்வாறு அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. .

Categories

Tech |