இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் IAS, IPS போன்ற குடியுரிமை பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த குடிமைப் பணிக்கான தேர்வை எழுத விரும்புவார்கள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். குடிமைப்பணி தேர்வானது முதல் நிலை, பிரதான மற்றும் நேர்முகத்தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு குடிமைப்பணி தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அனைவருக்கும் அரசு சார்பாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக இளைஞர்களின் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் உள்ள பசுமை வழி சாலையில் உள்ள குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதன்மை தேர்வுக்கான பயிற்சியை பெறுகிறார்கள்.
இந்நிலையில் பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனால் தற்போது மணிக்கு 3000 வரை மதிப்பூதியம் உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மதிப்பூதியம் மணிக்கு 1000 ரூபாயாகவும், கல்வித் துறையை சேர்ந்தவர்களுக்கு மணிக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கான மாத ஊதியத்தை 3000 மற்றும் உணவு, தங்குமிடம் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.