Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…! வெளியான முக்கிய அரசாணை..!!!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தால் அந்த மாணவர்களுக்கு 75,000 நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி தொடர்ந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அறிக்கை அளித்த வாக்குறுதிகளை 75% நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் கொரோனா  காலகட்டத்தில் மக்கள் இன்னல்களுக்கு ஆளான சூழ்நிலையில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து 16.05.2021 முதல் விற்பனை செய்ய முதல்வர் ஸ்டாலின் அரசாணை பிறப்பித்தார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண மற்றும்  நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என வாக்குறுதியை நிறைவேற்றினார். மேலும் கூட்டுறவு சங்கங்களின் நகைகளை  தள்ளுபடி குறித்த சிறப்பு தணிக்கை குழு நடத்திவருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அமலாக உள்ளது.

கொரோனா  குறைந்ததை தொடர்ந்து பிப்ரவரி 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நலனின்  அடிப்படையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது முடக்கம் அடைந்தாலோ  பாதிக்கப்பட்ட  சிறுவர்கள்  ஒவ்வொருவருக்கும் ரூபாய் 75,000 நிதியுதவி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிதியை அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை போன்றவற்றை அந்த மாணவ, மாணவியர் கல்விச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுக்கு பயன்படுத்தப்படும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |