Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு…. காலை சிற்றுண்டி….. தினசரி மெனு வெளியீடு….!!!!!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது அரசு பள்ளிகளின் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகவும், மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்ப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதன் முதலில் கடந்த 1957 ஆம் வருடத்தில் தான் இலவச உணவு திட்டம் காமராஜரால்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்பின் 1982 ஆம் வருடம் எம்ஜிஆரின் சத்துணவு திட்டமும் 1989ல் கருணாநிதியின் சத்துணவுடன் கூடிய முட்டை திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டு வந்தது.

இதன்பின் 2012 ஆம் வருடம் கலவை சாதம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் காலை சிற்றுண்டி  திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய திட்டத்திற்காக 33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கிட்டதட்ட 1,14,095 குழந்தைகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையே ஒவ்வொரு நாளும் என்னென்ன உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது என்பதற்கான மெனு பட்டியலும் அரசாணையில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அதாவது திங்கட்கிழமை ஏதாவது ஒரு உப்புமா வகையுடன் காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமைகளில் ஏதாவது ஒரு காய்கறி கிச்சடியும், புதன் கிழமை பொங்கலுடன் காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமைகளில் உப்புமா வகைகளுடன் காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் கேசரியும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களை கொண்டு காலை உணவு தயார் செய்ய வேண்டும் எனவும் காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் மாணவர்களுக்கு காலை உணவு பரிமாற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து ஒவ்வொரு குழந்தைகளுக்கும் 150 முதல் 200 கிராம் அளவில் உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் 60 மில்லி கிராம் அளவில் சாம்பார் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Categories

Tech |