தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 பருவத்தேர்வு முறை மற்றும் சமச்சீர் கல்வி திட்டம் அமலில் உள்ளது. முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளை முதல் இரண்டாம் பருவம் தொடங்க இருக்கிறது. இரண்டாம் பருவத் தேர்வுகள் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. மேலும் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஆன…