Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கடந்த 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கது. இருப்பினும் நடப்பு கல்வியாண்டு முடிய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இதனிடையில் ஏப்ரல் மாதத்துக்கு பின் கோடை விடுமுறை வருகிறது. தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் 1- 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவது சந்தேகமே.

அவர்களுக்கு தேர்வு நடைபெறுவதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கிறது. ஆகவே கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும். ஆனால் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தலாம். பொதுத் தேர்வு எழுதவுள்ள 10-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும்.

அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை புத்துணர்ச்சியுடன் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர். ஏற்கனவே 1- 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் மூட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |