தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக குறையாத காரணத்தினால் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் நேரடி வகுப்புகளை அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.