தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து கேள்வி எழுந்து வருகிறது. மேலும் பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த விட்டால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப் படுவார்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இந்த கருத்துக்கள் முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.