Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 1 வருடத்திற்கு பிறகு மீண்டும்…. சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி இருக்கிறது. இந்த அருவியில் கொரோனா பெருந்தொற்று  காரணமாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்து வழங்கி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரியின் உத்தரவின்படி, தேவதானபட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி டேவிராஜ் இன்று (15.02.2022) முதல் வழக்கம்போல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்து கும்பக்கரை அருவி திறக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |