Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சை பெற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சேலம், தர்மபுரியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சுயமாக சிகிச்சை செய்து கொள்வதன்மூலம் கண் பார்வை பாதிக்கக்கூடும். அதனால் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

Categories

Tech |