தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து சட்டபேரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்தபின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது, பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதால் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என கூறினார்.
மேலும் பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான பாடங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.