தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி பள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், உலக அளவில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் கடந்த 2 வருடங்களாக பாதிப்பை ஏற்படுத்தியதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் மாறிமாறி செயல்பட்டு வந்தன.
தற்போது கொரோனா மூன்றாவது அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட்டது. அதேபோல் தடுப்பூசிகள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு செலுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் உலக நாடுகளில் டெல்டா மற்றும் ஓமிக்ரான் இணைந்து டெல்டாக்ரான் என்ற புதிய வைரஸ் ஆக உருமாறி அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்த போவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் இந்த புதிய திரிபை கருத்தில்கொண்டு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி பள்ளிகளை ரத்து செய்ய வேண்டுமென பெற்றோர்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.