தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது அவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு என்று அவர் கூறியுள்ளார்.