தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்று ஆய்வு செய்த அறிக்கையை இன்று முதல்வரிடம் தர இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதில் கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கேரளாவை ஒட்டி இருப்பதால் அந்த மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது என்பது சந்தேகமே. மேலும் எந்த வகுப்புகளை திறக்கலாம் என முதல்வர் வல்லுநர்களுடன் பேசி முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.