தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில் நவம்பர் 1 முதல் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதியவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள், தேசிய நிபுணர் குழு அனுமதிக்கு பிறகு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.