Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1, 800 பேருக்கு மட்டுமே வேலை… அதிர்ச்சி தரும் செய்தி…!!!

தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் 1800 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏராளமான இளைஞர்கள் பதிவு செய்வது வழக்கம். அதில் குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் உயர்கல்வி படிப்பு முடித்தவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால் பலருக்கு படித்த படிப்புக்கு வேலை கிடைப்பது இல்லை. அதனால் கிடைத்த வேலையை செய்து வருகிறார்கள்.

அவர்களின் சிலர் வருடம் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகிறார்கள். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் எந்த ஒரு வேலையும் கிடைப்பதில்லை. ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் பணி கிடைத்து விடும் என்ற நிலைமை மாறி தற்போது சாகும்வரை வேலையே கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெரும்பாலானோர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 1800 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு கணக்கின்படி 81,30,025 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இவர்களில் வெறும் 1800 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |