தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி முதல் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்த காரணத்தினால் தேர்வு நாட்களில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும், மற்ற நாட்களில் வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றுடன் தேர்வுகள் முடிவடைகிறது. இன்றுடன் தேர்வு முடிவடைவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை 14ஆம் தேதி முதல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, கோடை விடுமுறையை கொண்டாடுவதில் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர், அடுத்து ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.