தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் கடந்த மாதம் மீண்டும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு இணையம் வழியாக வருகின்ற 3ஆம் தேதி நடைபெற இருந்த கற்றல் வலுவூட்டல் பயிற்சியை தற்காலிகமாக ஒத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் நேரடி வகுப்புக்கு தடைவிதித்து, ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.