Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1- 9 ஆம் வகுப்புக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தேர்வுமுடிந்த கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கோடை கால விடுமுறைக்கு பிறகு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார். மேலும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதி, பள்ளி வேலை நேரம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |