Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தல்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3வது அலைக்கு பின் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாத தொடக்கத்தில் தொடங்கி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த 5ஆம் தேதி தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்துள்ளது. அதன்பின் நாளைமுதல் 1-9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. வருடந்தோறும் மே மாதம் மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டு பின், 1 மாதம் கால இடைவெளிக்கு பின் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும். இந்த விடுமுறை காலத்தை மாணவர்கள் பயனுள்ள அடிப்படையில் செலவிட விரும்புவர். அதன்படி மொழி வகுப்புகளில் சேருதல், தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுதல் ஆகியவைகளை செய்வர்.

நடப்பு ஆண்டு கோடை விடுமுறை வரவுள்ள சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மாணவர்கள் கோடை விடுமுறையில் நீர் நிலைகளுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். பின் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தவேண்டும். பெற்றோர்கள், பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் காணும் விடுமுறையாக இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |