தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தே வகுப்பறையில் அமர தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு, மலர் கொத்து கொடுத்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.