தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்பிறகு பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடத்துவது பற்றியும் தேர்வுத்துறையில் ஆலோசித்து வருகின்றன.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒரு பள்ளியில் 100 க்கும் மேலாக இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் அப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்ப டாது.
இதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்விற்கு தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களை வெகுதூரம் அலைய வைக்க கூடாது என்றும் அந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதே பள்ளியில் தேர்வு எழுத அனுமதித்தால் தங்கள் மாணவர்களுக்கு ஆசிரியர்களே உதவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.மேலும் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள் உதவியாளர்கள் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள் என்று பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.இதற்கு மத்தியில் இன்னும் 2 வாரத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அதனால் அரசியல் சட்ட சபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதில் மிகவும் சிரமம் ஏற்படும். எனவே பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? அல்லது தேதியை ஒத்தி வைக்கலாமா? என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.