Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கு இன்று முதல்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் செய்முறை தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

அந்த வகையில் 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வானது செப்டம்பர் 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அசல் மதிப்பெண் சான்றிதழை வழங்குவது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், 10ஆம் வகுப்பில் பாஸ் ஆகாத பாடங்களை கடந்த செப்டம்பர் மாதம் துணைத் தேர்வு எழுதி அதன் மூலம் எல்லா பாடங்களிலும் பாஸ் ஆனவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை இன்று முதல் வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் இத்தேர்வில் பாஸ் ஆகாதவர்களுக்கு தற்போது தேர்வெழுதிய பாடத்திற்கான மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |