தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பாட செய்முறைத் தேர்வுக்கு தனித் தேர்வுகள் பெயர்களை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி மற்றும் தனித் தேர்வர்கள் , ஏற்கனவே 2012 ஆம் ஆண்டிற்கு முன்னதாக பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியலில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற நவம்பர் 18 முதல் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், அலுவலகங்களில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு மாவட்ட கல்வி அலுவலர் ஒதுக்கீடு செய்த பள்ளிகளுக்குச் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த தேர்வுகளில் பயிற்சி வகுப்புகளுக்கு தனித்தேர்வர்கள் 85 சதவிகிதம் வருகை தந்தவர்கள் மட்டுமே நடப்பு கல்வி ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு தேர்வு நடக்கும் தேதி மற்றும் மையங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் கட்டாயம் செய்முறைத் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.