Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்….!!!!

தமிழகத்தில் நடப்பாண்டில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி என்ற விபரம் புதிதாக சேர்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்று வந்த நிலையில், படிப்படியாக தொற்று குறைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் விடுமுறை அளிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது விடுமுறை மேலும் நெருக்கடியை தந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதத்தில் தேர்வு நடத்துவதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த வருடம் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்றுமொழி என்ற விபரம் சேர்க்கப்படுகிறது. அதாவது 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றுள்ளனர் என்ற விபரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் தனித்தனியாக பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு  ஆணையிட்டுள்ளது. மேலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |