Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆயிரம் பணியிடங்கள்…… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவை உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துரை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிகளில் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர், இயக்குனர் என அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது “இந்த ஆய்வுக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மாவட்ட அளவில் எந்த நிலையில் உள்ளது என அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டதாக கூறினார்.

மேலும் கல்வி தொலைக்காட்சியின் சிஇஓவாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அவரின் பின்புலம் குறித்து ஆராய கூடிய பணி நடைபெற்று வருகின்றது. அவரைப் பற்றி முழு தகவல் அறிந்த பிறகு தெளிவான விளக்கம் தர முடியும். மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். முதற்கட்டமாக முதுநிலை ஆசிரியர் பணி நியமனம் செப்டம்பருக்குள் முடிக்கப்படும். அதன் பிறகு படிப்படியாக இதர ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |