தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரக வளர்ச்சி, தொழில்துறை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட 10 துறைகளின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1) மத்திய அரசு பணியில் இருந்து மாநில பணிக்கு திரும்பியுள்ள அமுதா ஐஏஎஸ் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் முதன்மை செயலாளராக நியமனம்
2) தொழில்துறை முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமனம்
3) நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கிருஷ்ணன் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.
4) போக்குவரத்து துறை முதன்மை செயலாளராக கே.கோபால் ஐஏஎஸ் நியமனம்
5) பொதுப்பணித் துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்
6) பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலராக தயானந்த் கட்டாரியா நியமனம்
7) எரிசக்தி துறையின் முதன்மை செயலராக ரமேஷ் சந்த் மீனா நியமனம்
8) கைத்தறி, துணிநூல் துறையின் முதன்மை செயலராக தர்மேந்திரா பிரதாப் யாதவ் நியமனம்
9) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலராக அபூர்வா நியமனம்
10) நில சீர்திருத்தங்கள் முதன்மை செயலராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.