Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பேருந்து நிலையங்களை புணரமைக்கும் பணி மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் மாநகராட்சிகளான திருப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதை போல் வேலூர், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி, அரியலூர், வடலூர், கூடலூர் போன்ற 8 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

Categories

Tech |