தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. தற்போது மழை குறைந்து வந்த நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதிக கனமழை பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.