தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சி ஊட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Categories