தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் கன மழையும் புதுவையில் மிதமான மழையும் பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளது.