தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொது தேர்வில் பங்கேற்க உள்ள பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சியை பெறுவதற்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.