தமிழகத்தில் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறும். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 5-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 25 முதல் மே 2-ம் தேதி வரையும் நடைபெறும்.
இந்த தேர்வுக்கான மதிப்பெண்களை மே 4-ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு வெளியானது. இந்நிலையில் 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு காண கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இந்த தேர்வு மதிப்பெண்களை மே 4-ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.