Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, +1, +2 மாணவர்களுக்கு வகுப்புகள்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒன்று முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுவது பற்றி இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் தினமும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. முதற்கட்டமாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

Categories

Tech |