தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடமாக மாணவர்கள் சரிவர பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை(ஏப்ரல் 25) தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுத இருக்கின்றனர். செய்முறைத் தேர்வு வழக்கமாக 3 மணி நேரம் நடத்தப்படும். இந்த சூழ்நிலையில் நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.