தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் நடைபெறவிருந்த அரையாண்டுதேர்வு திருப்புதல் தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்து முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த மாதம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்த கல்வி ஆண்டில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையை குறைக்க பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டிய நிலையில் அந்த தேர்வானது திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பள்ளி கல்வி ஆணையர் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி,
10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை:
- 17.12.2021 – தமிழ்
- 18.12.2021 – ஆங்கிலம்
- 20.12.2021 – கணிதம்
- 23.12.2021 தொழிற்கல்வி பாடம்
- 24.12.2021 – சமூக அறிவியல்
12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை:
- 17.12.2021 – தமிழ்
- 18.12.2021 – ஆங்கிலம்
- 20.12.2021 – இயற்பியல், பொருளியல், கணினி, தொழில்நுட்பம்
- 21.12.2021 – கணக்குப்பதிவியல் , வேதியியல், புவியியல்
- 22.12.2021 – கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை
- 23.12.2021 – உயிரியல், தாவரவியல், வரலாறு
- 24.12.2021 – கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல்