Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுக்கான பாடத் திட்டங்களை பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பி வைத்துள்ளார். அதில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு பாடத் திட்டங்கள் அனைத்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அந்த பாடத் திட்டங்களின் அடிப்படையில் திருப்புதல் தேர்வு நடத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பை  பொருத்தவரை அனைத்து பாடங்களிலும் திருப்புதல் தேர்வு நடத்தப்படும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 27 பாடங்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பிரிவிற்கு ஏற்ப பாடத்திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |