இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 100 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.