Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 கோயில்களில்…. இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் முடிவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தப்பட்ட கோவில் சிலைகள் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 100 முக்கிய கோவில்களில் நந்தவனம் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி இடவசதி உள்ள கோயில்களின் விவரங்களை அனுப்பி வைக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதற்கு பிறகு துரிதமான பணிகள் நடைபெற தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |