திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்க்காக அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அடிப்படையில் 2006 ஆம் வருடம் மத்திய அரசு வருடத்திற்கு 100 நாள் வேலை வழங்கும் திட்டமான, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் புது குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மனுதாரர் தெரிவித்து உள்ளார். மேலும் கிராம மக்களின் சமூபொருளாதார மேம்பாட்டுக்காக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் தமிழகத்தில் நட உத்தரவிட வேண்டும்.
அத்துடன் பல்வேறு மருத்துவ குணங்கள் உடைய முருங்கை மற்றும் பல பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படும் பனை மரங்களை நடக்கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி மத்திய – மாநில அரசுகளுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என்று அய்யா தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.