தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம். தமிழக முழுவதும் இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தனியார் நிலத்தில் வேலை பார்க்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதுமே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை எனவும், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை பார்ப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலாளரை சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் நடைமுறைகள், வழக்கு குறித்து தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அறிக்கையளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது..